இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி

By 5:38 PM , ,

இன்னொரு கேலிசித்திரம்


காலம் என் கேலிச்சித்திரத்தை DSC_0033
வரைந்துவிட்டது
உயரத்தையும்
முன்பற்க்களின் இடைவெளியையும் 
நிச்சயம் கணக்கில் எடுக்கும்
என்று நினைத்திருந்தேன்
எடுக்கவில்லை
என் கூர்மையற்ற மூக்கைக்கூட
அது பொருட்படுத்தக் காணோம்
கனத்த கண்ணாடியின்றியும்
முகத்தின் சாயல்
பிடிப்பட்டிருந்தது
அதன் கோடுகளுக்குள்
என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன
என் சித்திரத்தை விட
என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது
எனினும்
என்னுடைய எந்த அடையாளத்தை
அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம்
என்ற புதிரை
என்னால் விடுவிக்க முடியவில்லை
அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது
அடுத்த நாளில்
இன்னொரு கேலிச் சித்திரம்…

*****
நன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்

You Might Also Like

4 comments

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்
    கல்யான்ஜிக்கும் நன்றிகள்

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி ராம் :)

    ReplyDelete
  3. என் சித்திரத்தை விட என் கேலி சித்திரம் நன்றாக இருக்கிறது என்ற வரிகளில் இந்த கவிதை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்

    ReplyDelete

Related Posts with Thumbnails